பொள்ளாச்சி நகர் பகுதியில் செயலிழந்து கிடக்கும் சிசிடிவி கேமராக்கள்; குற்ற சம்பவங்களை கண்காணிப்பதில் சிக்கல்

கோவை: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்களை கண்காணிப்பதற்காக, காவல்துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோவை: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்களை கண்காணிப்பதற்காக, காவல்துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.



பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக பிடிக்க, காவல் துறையினருக்கு பெரும் உதவியாக இருந்து வரும், சிசிடிவி கேமராக்கள் தற்போது பராமரிப்பின்றி இருப்பதால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.



குறிப்பாக, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொள்ளாச்சி கடைவீதி, பேருந்து நிலைய சிக்னல், கோவை ரோடு, வெங்கடேசா காலனி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்ட கேமராக்கள், பழுதடைந்து, உடைந்து தொங்குகின்றன. மேலும், பல்வேறு கேமராக்கள் பழுதாகி செய்யல்படாமல் உள்ளன என்று கூறப்படுகிறது.



தற்போது, ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால். மீண்டும் பொள்ளாச்சி நகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்து உள்ளதால், கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, செயல்படாமல் உள்ள கேமராக்களை உடனடியாக சீரமைக்க வேண்டும், மேலும் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறைகளில், காவல்துறையினர் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...