கோவை: பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்னை நகரம் என்றழைக்கப்படும் பொள்ளாச்சி, தென்னை சார்ந்த தொழில்களில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. மேலும் மாவட்டத்துக்கு இணையான மக்கள் தொகை அதிகமுள்ள பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அரசு இதுவரை மாவட்டமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற பொள்ளாச்சியை தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், அக்கட்சியின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் தலைமை தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட நான்கு வருவாய் வட்டங்கள் உள்ளது. அதேபோல், தென்னை சார்ந்த தொழிலில் படிப்படியாக முன்னேறி வரும் பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால், அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.
எனவே, தமிழக அரசு உடனடியாக பொள்ளாச்சி தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.