திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சீரமைக்கப்படாத சாலைகளால் தொடர் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் தலை, கைகளில் கட்டு போட்டு நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு நடைபெற்ற பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் பல்வேறு சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில், மழையும் பெய்து வரும் சூழலில் தெரு விளக்குகளும் பழுதடைந்து ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு பலர் காயமடைந்து வருவதாகவும் உடனடியாக பாதாள சாக்கடை திட்ட பணிகளை முடித்து சாலையை சீரமைக்க வேண்டும், தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையிலும் தலையிலும் கட்டு போட்டு நூதன முறையில் இடுவம்பாளையம் பகுதி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.