கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி கொண்டிருக்கும் நிலையில், கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட அண்ணாநகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு பின்னர், அப்பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற வேண்டுமெனவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டுமென சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரை யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது, காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் வீட்டை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திட வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், வீட்டிலுள்ள அனைவரும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், நோய் எதிர்ப்பு சக்திக்காக வழங்கப்பட்ட மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமெனவும், கபசுர குடிநீர் பருக வேண்டுமெனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, வடக்கு மண்டலம், வார்டு எண்.41, ரங்கநாதன் வீதி, சக்தி ரோடு பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, அங்கு மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கூறினார்.

மேலும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செட்டிவீதி பஸ் ஸ்டாப் எதிரில் கே.சி.தோட்டம் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததை பார்வையிட்ட பின்னர், வீடு இடிந்து விழுந்ததில் பலியானோர் விபரங்கள் குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர் அவர்கள், மீட்புப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மண்டல உதவி ஆணையர்கள் செந்தில்குமார் இரத்தினம்(வடக்கு), ரவி(தெற்கு), மண்டல சுகாதார அலுவலா்கள் லோகநாதன், ராமசந்திரன், உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனர்.