கோவை செட்டி வீதியில் வீடு இடிந்து விழுந்த இடத்தை நேரில் பார்வையிட்டு மீட்புப்பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில்‌ தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில்‌ தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாடு முழுவதும்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று பரவி கொண்டிருக்கும்‌ நிலையில்‌, கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம்‌ பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சுடன்‌ தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.



அதன்‌ தொடர்ச்சியாக இன்று மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட அண்ணாநகரில்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில்‌ கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வரும்‌ பணிகளை பார்வையிட்டு பின்னர்‌, அப்பகுதிகளில்‌ தூய்மை பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம்‌ தினமும்‌ காலை மற்றும்‌ மாலை ஆகிய இருவேளைகளில்‌ கிருமி நாசினி தெளிக்கும்‌ பணிகள்‌ நடைபெற வேண்டுமெனவும்‌, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில்‌ இருப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ கிடைப்பதற்கு உரிய வசதிகள்‌ ஏற்படுத்தி தரவேண்டுமென சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம்‌ தெரிவித்தார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட காலம்‌ முடியும்‌ வரை யாரும்‌ வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது, காலை மற்றும்‌ மாலை இரு வேளைகளிலும்‌ வீட்டை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திட வேண்டும்‌, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்‌, முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌, வீட்டிலுள்ள அனைவரும்‌ கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்‌, நோய்‌ எதிர்ப்பு சக்திக்காக வழங்கப்பட்ட மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமெனவும்‌, கபசுர குடிநீர்‌ பருக வேண்டுமெனவும்‌ மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.



அதனை தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌, வார்டு எண்‌.41, ரங்கநாதன்‌ வீதி, சக்தி ரோடு பகுதியில்‌ நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, அங்கு மருத்துவ முகாமில்‌ கலந்து கொண்ட பொதுமக்களிடம்‌ சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்‌, முகக்கவசம்‌ கட்டாயம்‌ அணிய வேண்டும்‌ என்று கூறினார்.



மேலும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செட்டிவீதி பஸ்‌ ஸ்டாப்‌ எதிரில்‌ கே.சி.தோட்டம்‌ பகுதியில்‌ வீடு இடிந்து விழுந்ததை பார்வையிட்ட பின்னர், வீடு இடிந்து விழுந்ததில்‌ பலியானோர்‌ விபரங்கள்‌ குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர் அவர்கள்‌, மீட்புப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மண்டல உதவி ஆணையர்கள்‌ செந்தில்குமார்‌ இரத்தினம்‌(வடக்கு), ரவி(தெற்கு), மண்டல சுகாதார அலுவலா்கள்‌ லோகநாதன்‌, ராமசந்திரன்‌, உதவி பொறியாளர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...