பொள்ளாச்சி அருகே ரோட்டில், நடந்து சென்ற நபரிடம், செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

பொள்ளாச்சி அருகே ரோட்டில், நடந்து சென்ற நபரிடம், செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

பொள்ளாச்சி அருகே ரோட்டில், நடந்து சென்ற நபரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடும், சிசிடிவி பதிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தென்சங்கம்பாளையம் - கோட்டூர் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே இரு இளைஞர்கள் நடந்து வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஒருவர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். 



இந்த காட்சிகள், அங்குள்ள பெட்ரோல் பங்கின் CCTV கேமராவில் பதிவாகின. தற்போது, அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், செல்போனை பறிகொடுத்த நபர்கள் யாரும் புகார் கொடுக்க வரவில்லை, என்பதால் காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்யவில்லை. 

இருப்பினும், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் யார் என கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கோட்டூர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...