பொள்ளாச்சி அருகே ரோட்டில், நடந்து சென்ற நபரிடம், செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.
பொள்ளாச்சி அருகே ரோட்டில், நடந்து சென்ற நபரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடும், சிசிடிவி பதிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தென்சங்கம்பாளையம் - கோட்டூர் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே இரு இளைஞர்கள் நடந்து வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஒருவர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

இந்த காட்சிகள், அங்குள்ள பெட்ரோல் பங்கின் CCTV கேமராவில் பதிவாகின. தற்போது, அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், செல்போனை பறிகொடுத்த நபர்கள் யாரும் புகார் கொடுக்க வரவில்லை, என்பதால் காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்யவில்லை.
இருப்பினும், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் யார் என கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கோட்டூர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.