கோவையில் செயல்பட்டு வரும் ஏசிசி சிமெண்ட் ஆலையை மூட வலியுறுத்தி, பாஜகவினர் பாலக்காடு நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஏ சி சி சிமெண்ட் நிறுவனத்தின் ஆலையை மூட வலியுறுத்தி, கோவை தெற்கு  மாவட்ட பாஜகவினர், பாலக்காடு நெடுஞ்சாலையை மறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஏ சி சி சிமெண்ட் நிறுவனத்தின் ஆலையை மூட வலியுறுத்தி, கோவை தெற்குமாவட்ட பாஜகவினர், பாலக்காடு நெடுஞ்சாலையை மறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மதுக்கரை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் ஏ சி சி சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும், நச்சு புகையால் மதுக்கரை சுற்றுவட்டார மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, இந்த சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையை நிறுத்தக்கோரி குரும்பபாளையம், பகுதியை சேர்ந்த பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 



இந்நிலையில், மக்களுக்கு இடையூறாக மதுக்கரையில்செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும்,கோவை தெற்கு மாவட்ட பாஜகவினர், பாலக்காடுநெடுஞ்சாலையை மறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன், தலைமையில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் சிமெண்ட் ஆலையை மூட வலியுறுத்தி கோசங்களைஎழுப்பினர். ஆலையை, உடனடியாக மூடவில்லை என்றால் மாபெரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...