கோவை மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஏ சி சி சிமெண்ட் நிறுவனத்தின் ஆலையை மூட வலியுறுத்தி, கோவை தெற்கு மாவட்ட பாஜகவினர், பாலக்காடு நெடுஞ்சாலையை மறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஏ சி சி சிமெண்ட் நிறுவனத்தின் ஆலையை மூட வலியுறுத்தி, கோவை தெற்குமாவட்ட பாஜகவினர், பாலக்காடு நெடுஞ்சாலையை மறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மதுக்கரை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் ஏ சி சி சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும், நச்சு புகையால் மதுக்கரை சுற்றுவட்டார மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இந்த சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையை நிறுத்தக்கோரி குரும்பபாளையம், பகுதியை சேர்ந்த பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில், மக்களுக்கு இடையூறாக மதுக்கரையில்செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும்,கோவை தெற்கு மாவட்ட பாஜகவினர், பாலக்காடுநெடுஞ்சாலையை மறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன், தலைமையில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் சிமெண்ட் ஆலையை மூட வலியுறுத்தி கோசங்களைஎழுப்பினர். ஆலையை, உடனடியாக மூடவில்லை என்றால் மாபெரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.