தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புற சாலையோரங்களில் இரண்டு புறமும் புளிய மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புற சாலையோரங்களில் இரண்டு புறமும் புளிய மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்.

கோவை: கோவை மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புற சாலையோரங்களில் இரண்டு புறமும் புளிய மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும் சிறிய அளவில் நர்சரி அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செயப்படுகிறது. 



ஆண்டுதோறும் பொது இடங்கள், கிராமப்புற சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்தல் திட்டங்களின் கீழ் 1 லட்சம் மரக்கன்றுகள் வரை நடவு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, கோவையில்நடப்பாண்டு 2 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறுகையில்: 

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 2 லட்சம் மரக்கன்றுகள் வரை நடவு செய்ய திட்டமிட்டு கெம்மாரம்பாளையம், சிக்காரம்பாளையம் ஆகிய நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

புங்கன், புளியன், வேம்பு, பூவரசு, கொன்றை, நாவல், மகோகனி உள்பட 20க்கும் மேற்பட்ட வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

அதேபோல், கிராமப்புற சாலையோரங்களில் இரண்டு புறமும் புளிய மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதன் மூலம், எதிர்காலத்தில் ஊரட்சிகளுக்கு வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது. 



தற்போது, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வந்தாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின் அதிகளவில்நடவு செய்யப்படும், என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...