தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புற சாலையோரங்களில் இரண்டு புறமும் புளிய மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்.
கோவை: கோவை மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புற சாலையோரங்களில் இரண்டு புறமும் புளிய மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும் சிறிய அளவில் நர்சரி அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செயப்படுகிறது.

ஆண்டுதோறும் பொது இடங்கள், கிராமப்புற சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்தல் திட்டங்களின் கீழ் 1 லட்சம் மரக்கன்றுகள் வரை நடவு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, கோவையில்நடப்பாண்டு 2 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறுகையில்:
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 2 லட்சம் மரக்கன்றுகள் வரை நடவு செய்ய திட்டமிட்டு கெம்மாரம்பாளையம், சிக்காரம்பாளையம் ஆகிய நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புங்கன், புளியன், வேம்பு, பூவரசு, கொன்றை, நாவல், மகோகனி உள்பட 20க்கும் மேற்பட்ட வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், கிராமப்புற சாலையோரங்களில் இரண்டு புறமும் புளிய மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதன் மூலம், எதிர்காலத்தில் ஊரட்சிகளுக்கு வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தற்போது, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வந்தாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின் அதிகளவில்நடவு செய்யப்படும், என்றார்.