கோவையில் காவலர்களிடையே கொரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுபடுத்தப்பட்டுள்ளது - மாநகர காவல் ஆணையர்!

கோவை: கோவையில் காவலர்களிடையே கொரோனா பரவல் கட்டுபடுத்தப்பட்டு உள்ளதாக மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் காவலர்களிடையே கொரோனா பரவல் கட்டுபடுத்தப்பட்டு உள்ளதாக மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.



கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் பேசுகையில், கொரோனா தொற்று கண், மூக்கு, வாய் வழியாக எளிதில் பரவும் என்பதால் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மாநகர காவலில் பணிபுரியும் காவலர்களிடையே நோய் தொற்று பரவல் கட்டுபடுத்தப்பட்டு உள்ளது என்றார்.

கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் காவலர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் இது சக காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றவர், பாதுகாப்புக்காக கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, கபசுர குடிநீர் அருந்துவது, வெளியில் சென்று வரும்போது குளிப்பது உள்ளிட்டவைகளை பின்பற்றுவதோடு குடும்பத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.



அதேபோல, விடுமுறையில் சென்று பணிக்கு திரும்பும் காவலர்கள் பணியின் போது பாதுகாப்பாக இருப்பது போல விடுமுறையில் செல்லும் போதும் அதே கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.



இதனை தொடர்ந்து முககவசம், கையுறை, கிருமி நாசினி, கண்ணாடி உள்ளிட்ட பாதுகாப்பு அடங்கிய உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கினார். மேலும், மாநகர காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் இது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின், குற்றபிரிவு துணை ஆணையர் உமா, தலைமையிட துணை ஆணையர் குணசேகரன் மற்றும் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...