நீலகிரி: குன்னூரில் மூன்று நாட்களாக குடியிருப்பு பகுதியில் முகாமிட்டிருக்கும் காட்டெருமைகளால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அண்மைகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டெருமை கூட்டங்கள் உணவு மற்றும் குடிநீருக்காக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு உலா வருகின்றன.
இந்த நிலையில், குன்னூர் கண்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட செபஸ்டியர்புரம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக காட்டெருமைகள் கிராமத்திற்குள் தஞ்சமடைந்துள்ளது.

இது பொதுமக்களை கண்டால் விரட்டி வந்து தாக்குவதற்கு முற்படுகிறது.
மேலும், கிராம மக்கள் ஒன்றிணைந்து இந்த காட்டெருமைகளை வனப்பகுதிக்கு விரட்டி அடித்தாலும் மீண்டும் கிராமத்திற்குள் வருவது தொடர் கதையாக உள்ளது.
எனவே, அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.