திருப்பூர்: திருப்பூரில் ரயில் போக்குவரத்து முன்பதிவிற்கு ஆட்கள் வராததால் ரயில் நிலைய முன்பதிவு மையம் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவரும் நிலையில், வரும் 7-ம் தேதி முதல் ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 9 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று முதல் ரயில் போக்குவரத்துக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. முன்னதாக இ பாஸ் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றதுடன் பணிபுரியும் ஊர்களுக்கும் சென்று வருகின்றனர். மேலும், 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து முழுமையாக துவங்க உள்ளது.
இந்த நிலையில், சில ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்ற அறிவிப்பு காரணமாக முன்பதிவு செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் திருப்பூரில் மக்கள் கூட்டம் இன்றி ரயில் நிலைய முன்பதிவு மையம் வெறிச்சோடி காணப்பட்டது.