கோவை மாவட்டத்தில் அரசு பஸ்கள் இயக்கியதில் நேற்று ரூ. 19 லட்சம் வருவாய் - போக்குவரத்து அதிகாரிகள்

கோவை: கோவை மாவட்டத்தில் 221 அரசு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டதில், ரூ. 19 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது, என போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

கோவை: கோவை மாவட்டத்தில் 221 அரசு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டதில், ரூ. 19 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது, என போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்தது. இருந்த போதும், கொரோனா தொற்று கோவையில் வேகமாக பரவி வருவதால், குறைந்த அளவிலான பயணிகள் கூட்டம் மட்டுமே பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். அதன் பொருட்டு, குறைந்த அளவிலான தனியார் மற்றும் அரசு பஸ்கள் தான் இயக்கப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், கிருமிநாசினி அவ்வப்போது தெளிக்கப்பட வேண்டும் மற்றும் பயணிகளுக்கு கைகளை சுத்தம் செய்து கொள்ள கிருமி நாசினி மருந்து கொடுக்க வேண்டும் போன்ற அறிவுரைகளை அரசு வழங்கியுள்ளது.

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டுமே பஸ்களில் ஓரளவுக்கு பயணிகள் பயணிக்கின்றனர். இதனால் அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்ட போதிலும், பொதுமக்களின் நலன் கருதி பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். நேற்று ரூ 19 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது," என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...