பொள்ளாச்சியில் இரு தினங்களில் 30 பேருக்கு நோய் தொற்று உறுதி; ஒரு முதியவர் உயிரிழப்பு.

பொள்ளாச்சி:  பொள்ளாச்சியில் இரு தினங்களில் 10 பெண்கள் 20 ஆண்கள் என 30 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது 72 வயது முதியவர் உயிரிழப்பு.

பொள்ளாச்சி: 

பொள்ளாச்சியில் இரு தினங்களில் 10 பெண்கள் 20 ஆண்கள், என 30 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பொள்ளாச்சியில் நேற்று முன் தினம், கொரோனா தொற்று உறுதி

செய்யப்பட்ட நபர்களில்,பி.கே.எஸ்.காலனியில் 45 வயது பெண், நல்லி கவுண்டர் வீதியில் 27 வயது ஆண், 21 வயது ஆண், 22 வயது பெண், 4 வயது ஆண் குழந்தைக்கும், 3 வயது ஆண்குழந்தைக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

மேலும், ஆனைமலை அங்கலகுறிச்சியில் 26 வயது ஆணுக்கும், பாரமடையூரை சேர்ந்த 28 வயது ஆண் உள்பட நேற்று 22 பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்தது. 

இதில், அண்ணா அவென்யூவை சேர்ந்த 72 வயது முதியவர், கோவை தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்றுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்த பின் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று உயிரிழந்தார்.

இதே போல, நேற்று பொள்ளாச்சி அண்ணா அவென்யூ, 83 வயது ஆணுக்கும், அழகப்பா லே அவுட்டை சேர்ந்த 29 வயது பெண்ணுக்கும், கே.ஆர்.பி.ஜி., நகர், 30 வயது ஆணுக்கும், சின்னாம்பாளையம் ராஜ் நகர் 13 வயது ஆணுக்கும், மின் நகர் 35 வயதான பெண்ணுக்கும், நஞ்சேகவுண்டன்புதூர் 19 வயது பெண்ணுக்கும், மாக்கினாம்பட்டி பகவதிபுரத்தை 20 வயது ஆணுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. 

இதையடுத்து, பொள்ளாச்சியில் 2 தினங்களில் 10 பெண்கள், 20 ஆண்கள் என 30 பேருக்கு தொற்று இருப்பதாக சுகாதார துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...