பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இரு தினங்களில் 10 பெண்கள் 20 ஆண்கள் என 30 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது 72 வயது முதியவர் உயிரிழப்பு.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் இரு தினங்களில் 10 பெண்கள் 20 ஆண்கள், என 30 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பொள்ளாச்சியில் நேற்று முன் தினம், கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்ட நபர்களில்,பி.கே.எஸ்.காலனியில் 45 வயது பெண், நல்லி கவுண்டர் வீதியில் 27 வயது ஆண், 21 வயது ஆண், 22 வயது பெண், 4 வயது ஆண் குழந்தைக்கும், 3 வயது ஆண்குழந்தைக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
மேலும், ஆனைமலை அங்கலகுறிச்சியில் 26 வயது ஆணுக்கும், பாரமடையூரை சேர்ந்த 28 வயது ஆண் உள்பட நேற்று 22 பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்தது.
இதில், அண்ணா அவென்யூவை சேர்ந்த 72 வயது முதியவர், கோவை தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்றுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்த பின் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று உயிரிழந்தார்.
இதே போல, நேற்று பொள்ளாச்சி அண்ணா அவென்யூ, 83 வயது ஆணுக்கும், அழகப்பா லே அவுட்டை சேர்ந்த 29 வயது பெண்ணுக்கும், கே.ஆர்.பி.ஜி., நகர், 30 வயது ஆணுக்கும், சின்னாம்பாளையம் ராஜ் நகர் 13 வயது ஆணுக்கும், மின் நகர் 35 வயதான பெண்ணுக்கும், நஞ்சேகவுண்டன்புதூர் 19 வயது பெண்ணுக்கும், மாக்கினாம்பட்டி பகவதிபுரத்தை 20 வயது ஆணுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
இதையடுத்து, பொள்ளாச்சியில் 2 தினங்களில் 10 பெண்கள், 20 ஆண்கள் என 30 பேருக்கு தொற்று இருப்பதாக சுகாதார துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.