கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ திவான்‌ பகதூர்‌ சாலையில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில்‌ ஆய்வு!

கோவை: கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ திவான்‌ பகதூர்‌ சாலையில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ திவான்‌ பகதூர்‌ சாலையில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ திவான்‌ பகதூர்‌ சாலையில்‌ ஸ்மாட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.24.36 கோடி மதிப்பீட்டில்‌ சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல்‌ கெளலிபிரவுன்‌ ரோடு வரை மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.



இப்பணிகளில்‌ சாலை அமைக்கும்‌ பணி, பாதாள சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ பணி, மின்சார புதைவடம்‌, கேபில்கள்‌, 24x7 குடிநீர் குழாய்‌ பதிக்கும்‌ பணி, தொலைதொடர்பு கேபில்‌ அமைத்தல்‌, மழைநீர் வடிகால்‌ அமைத்தல்‌, பாதசாரிகள்‌ நடைபாதை, அலங்கார தெருவிளக்குகள்‌ அமைக்கும்‌ பணி, ஒளிரும்‌ விளம்பர பலகைகள் அமைக்கும்‌ பணி ஆகிய பணிகள்‌ நடைபெற்று வருவதை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப. அவர்கள்‌ இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.



இதனைத்‌ தொடர்ந்து, திவான்பகதூர்‌ சாலையில்‌ ரூ.41.33 கோடி மதிப்பீட்டில்‌ போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 373 கார்கள்‌ நிறுத்துவதற்காக கட்டப்பட்டு வரும் மல்டிலெவல்‌ கார்பார்க்கிங்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



முன்னதாக கோவை ஓப்பணகாரவீதி மாநகராட்சி பெண்கள்‌ மேல்நிலைப் பள்ளியில்‌ சமூக இடைவெளியுடன்‌ மாணவிகள்‌ சோக்கை நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி, செயற்பொறியாளர்கள்‌ ஸ்மாரா்ட்சிட்டி திட்டம்‌ சரவணகுமார்‌, வைதீஸ்வரன்‌ (மின்வாரியம்‌), உதவி செயற்பொறியாளர்‌ சுகந்தி, பால்ராஜ்‌(மின்வாரியம்‌) உதவி பொறியாளா்கள்‌ கமலக்கண்ணன்‌,

சத்தியமூர்த்தி, குடிநீர்‌ பிரிவு இளம் பொறியாளார்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...