கோவையில் ஒரே நாளில் 20.31 மிமீ சராசரி மழை பதிவு; அதிகபட்சமாக சூலூர் பகுதியில் 40 மிமீ மழை பெய்துள்ளது.
கோவை: கோவையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவையில் நேற்று ஒரே நாளில் 287.1 மிமீ மழை பெய்துள்ளது எனவும், சராசரியாக 20.51 மிமீ மழை பதிவாகியுள்ளது, என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், தொண்டாமுத்தூர், சிறுவாணி அணை பகுதிகள், வால்பாறை உள்ளிட்ட இடங்களில் ஜூலை மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ய துவங்கியுள்ளது.
இதனால், கோவை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனிடையே, கோவை மாவட்டம் முழுவதும் நேற்று 287. 1 மிமீ மழை பெய்துள்ளது. இதில், அன்னூர் 6 மிமீ, ஏர்போர்ட்டில் 13மிமீ, மேட்டுப்பாளையம் 35.2 மிமீ, சூலூர் 40 மிமீ, வேளாண்மை பல்கலைகழகம் 26 மிமீ, பொள்ளாச்சி 9.3 மிமீ, அழியார் 6.2 மிமீ, சோலையார் 15, வால்பாறை தாலுக்கா 26மிமீ, வால்பாறை பி.ஏ.பி 27 மிமீ, சின்னகல்லாறு 19 மிமீ, சின்கோனா 17மிமீ, கோவை தெற்கு 36மிமீ, பெ.நாபாளையத்தில் 11.4 மிமீ பதிவாகியுள்ளது.