மசினகுடி அருகே புலி தாக்கியதில் பழங்குடியின பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு!

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக எல்லையில் அமைந்துள்ள மசினகுடியில் ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணை புலி தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக எல்லையில் அமைந்துள்ள மசினகுடியில் ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணை புலி தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதுமலை காப்புக்காப்புக் காடுகளில் பழங்குடி இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள். இதில் குறும்பர் பாடியை சேர்ந்த குறும்பர் இன பெண்ணான கௌரி(50) என்பவர் தன் கணவருடன் முதுமலை காப்புக்காட்டில் கால்நடைகளை மேய்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஆடுகளை விரட்ட காட்டிற்குள் சென்ற போது, புலி தாக்கியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இது குறித்து தகவலறிந்த வன பாதுகாவலர்கள், காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிதைந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பாதுகாப்பு நிபுணர் விஜய் கிருஷ்ணராஜ் கூறுகையில், குறும்பர்கள் பொதுவாக குகையில் வசிப்பவர்கள். இது போன்ற சம்பவம் மசினகுடியில் முதன் முதலாக நடந்துள்ளது என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...