பொள்ளாச்சி அருகே பணத் தகராறில் மனைவிக்கு தீ வைத்த, 81 வயது கூலித் தொழிலாளி கைது

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (81), கூலி தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள்(55). இருவருக்கும் திருமணமாகி 40 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (81), கூலி தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள்(55). இருவருக்கும் திருமணமாகி 40 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்த நிலையில், வேலுச்சாமிக்கு சொந்தமான நிலத்தை விற்ற பணம் அவரது மனைவியிடம் இருந்ததாகத் தெரிகிறது. இந்தப் பணத்தை கொடுக்க மறுத்ததால், வேலுச்சாமிக்கும், அவரது மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், நேற்று முன்தினம் நள்ளிரவு காளியம்மாள் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி, வேலுச்சாமி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அங்கு சென்ற கோட்டூர் போலீசார் தீ காயங்களுடன் இருந்த காளியம்மாளை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வேலுச்சாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...