ஆவாரம்பாளையம் மேம்பாலம் பணிகள் 99 சதவீதம் நிறைவு; மின்கம்பிகள் அகற்றப்படாததால் அணுகு (service) சாலை அமைப்பதில் சிக்கல்

கோவை: கோவை கணபதி ஆவாரம்பாளையம் பகுதியில், ரயில்வே கிராசிங் பகுதியில் நடந்து வந்த உயர்மட்ட மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஆனால், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள மின் கம்பிகள் அகற்றப்படாததால், அணுகு சாலைகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவை கணபதி ஆவாரம்பாளையம் பகுதியில், ரயில்வே கிராசிங் பகுதியில் நடந்து வந்த உயர்மட்ட மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஆனால், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள மின் கம்பிகள் அகற்றப்படாததால், அணுகு சாலைகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை கணபதியில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில், ரயில்வே கிராசிங் உள்ளது. தினமும் அவ்வழியாக 40க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருவதால், அடிக்கடி அப்பகுதியில் ரயில்வே கேட் திறந்து மூடப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, இங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 550 மீட்டர் நீளம், 12 மீ அகலம் கொண்ட இந்த மேம்பால பணிகள், சுமார் ரூ.20 கோடி செலவில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டன.



தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மேம்பாலம் கீழ் பகுதியில் அணுகு சாலை என சொல்லக்கூடிய சர்வீஸ் சாலை, மட்டும் அமைக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது.



இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சரவணம்பட்டியில் இருந்து கணபதி வழியாக அவினாசி சாலை மற்றும் காந்திபுரம் செல்வதற்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் மேட்டுப்பாளையம் சாலையில், வெகுவாக போக்குவரத்து நெரிசல் குறையும்.

இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:



மின்கம்பிகள் இடமாற்றம் செய்யப்படவில்லை, மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள சாக்கடைகளும் புதுப்பிக்கப்படவில்லை, இதுபோன்ற, காரணங்களால் அணுகு சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துவிட்டன, என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...