சென்னை தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் இருவர் பிடிபட்டனர்
கோவை: சென்னையில் 2 கோடி பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில், தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில், ஆறு பேரை சென்னை போலீசார் தேடிவந்தனர். இதில், நான்கு பேர் பிடிபட்ட நிலையில்,கோவையைச் சேர்ந்த அப்துல் காதர் மற்றும் சிக்கந்தர் என்ற இருவரை, போலீஸ்சார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட இரண்டு பேரை, ஆனைமலை வழியாக தப்பிச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆனைமலை முக்கோணம் பகுதியில், வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, கோவையை சேர்ந்த, சிக்கந்தர் மற்றும் அப்துல்காதர் ஆகிய இருவரும், 4 சக்கர வாகனத்தில் வந்த போது,ஆனைமலை போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், இருவரும் சென்னை தொழிலதிபர் கடத்தல் வழக்கில் சம்மந்தபட்டவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் ஆனைமலை போலீசார் சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.