கோவையில் ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் தூசு கலந்த புகை..! ஒரு மாத காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் உறுதி!

கோவை: ஏசிசி தனியார் சிமெண்ட் தொழிற்சாலைகயில் இருந்து வெளியேறும் தூசு காரணமாக பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் முற்றுகையிட்ட நிலையில், ஒரு மாத காலத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிர்வாக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கோவை: ஏசிசி தனியார் சிமெண்ட் தொழிற்சாலைகயில் இருந்து வெளியேறும் தூசு காரணமாக பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் முற்றுகையிட்ட நிலையில், ஒரு மாத காலத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிர்வாக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.



இங்கிருந்து வெளியேறும் தூசு கலந்த புகை காரணமாக அருகில் வசித்து வரும் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு நேற்று சிமென்ட் தொழிற்சாலையில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மேலும், தொழிற்சாலை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அப்பகுதி மக்கள் தொழிற்சாலை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.



வீடுகளின் சுவர், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகளில் தூசு படர்ந்து இருப்பதை ஆய்வின் போது அறிந்தனர்.

இதனை தொடர்ந்து, பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிமெண்ட் தொழிற்சாலை நிறுவனத்தினர், ஒரு மாத காலத்தில் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...