கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியார் ஆற்றில் கழிவு நீர் கலப்பதால், தடுப்பணைகளில் ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமித்துள்ளது. மேலும், குடிநீர் மாசுபடுவதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், ஆழியார் ஆறு வழியாக கோட்டூர், ஆனைமலை, அம்பராம்பாளையம், ஆத்து பொள்ளாச்சி, கோபாலபுரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக கேரளாவுக்கு செல்கிறது.

இதில், குறிப்பாக ஆழியாறு, கோட்டூர், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடைக் கழிவுகள் நேரடியாக ஆற்றில் கலப்பதால், ஆனைமலை வழியாக செல்லும் ஆழியாறு தடுப்பணையில், ஆகாயத்தாமரைகள், ஆற்றை ஆக்கிரமித்துள்ளது.
இதனால், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆழியார் ஆற்றில், கழிவு நீர் கலப்பதால், ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து தண்ணீர் மாசுபட்டு, நோய்த்தொற்று ஏற்படும், அபாயம் உள்ளது என பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்த வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.