கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு; சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பு

கோவை: கோவை, பீளமேடு பகுதி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் தன் வீட்டு அருகில் வசித்து வரும் 13 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக, சிறுவனை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து, சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சேர்த்தனர்.








கோவை: கோவை, பீளமேடு பகுதி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் தன் வீட்டு அருகில் வசித்து வரும் 13 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக, சிறுவனை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து, சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

இது குறித்து, காவல்துறை தரப்பில் கூறுகையில்: பாதிக்கப்பட்ட சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருவதாகவும், சிறுவன் காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்ததாகவும், தெரிவித்தனர்.

இருவரது வீடுகளும், அருகருகே உள்ள நிலையில், சம்பவதன்று சிறுவன் அந்த சிறுமியை அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறினர்.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டதாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...