நெல் சாகுபடியை பாதிக்கும், புகையான் பூச்சிகளை எப்படி கட்டுபடுத்துவது என பொள்ளாச்சி விவசாயிகளுக்கு, வேளாண்துறையினர் அறிவுரை

நெல் சாகுபடியை பாதிக்கும்,புகையான் பூச்சிகளை எப்படி கட்டுபடுத்துவது என பொள்ளாச்சி விவசாயிகளுக்கு, வேளாண்துறையினர் அறிவுரை.

கோவை: நெல் சாகுபடியில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த,

புகையான் பூச்சிகளை அழிக்க இரவு நேரங்களில் விளக்கு பொறிகள் பயன்படுத்தலாம், என

வேளாண்துறையினர், பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனைமலை ஒன்றிய பகுதியில் நடப்பாண்டு, முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் 7-ஆம் தேதி ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 720 ஏக்கர் வரை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவ்வப்போது கனமழை மற்றும் கடும் வெயிலும் நிலவி வருவதால், பயிர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



இது குறித்து, வேளாண் துறையினர் கூறியதாவது:

மழை பெய்து வருவதால், நெல்லுக்கு தேவையான அளவு நீரை மட்டுமே பாய்ச்சவேண்டும். வயலில் வடிகால் வசதி செய்து நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்பது மற்றும் அதிகப்படியான தழைச்சத்து உரத்தால், புகையான் இலை சுருட்டு நோய்கள் தாக்குதல் ஏற்படும்.



நோய்கள் தாக்குதல் ஏற்பட்டால் 30 சதவீதம் வரை மகசூல் பாதிக்கும். உரத்தை தேவைக்கேற்ப பயன்படுத்தினால், இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதல் குறையும். புகையான் பூச்சிகளை அழிக்க இரவு நேரங்களில் விளக்குபொறிகள் பயன்படுத்தலாம்.



நோய் தாக்குதல்கள் காணப்பட்டால் விவசாயிகள் உடனடியாக, வேளாண் துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...