ஆனைமலையில் நடந்த ஏலத்தில் கொப்பரை விலை அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடந்த ஏலத்தில், கொப்பரை வரத்து குறைந்து காணப்பட்டது. விலை குவிண்டாலுக்கு 469 ரூபாய் அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடந்த ஏலத்தில், கொப்பரை வரத்து குறைந்து காணப்பட்டது. விலை குவிண்டாலுக்கு 469 ரூபாய் அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது குறித்து, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது:

ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 506 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை தரம் பிரித்து, அதிகாரிகள் ஏலமிட்டனர். முதல் தர கொப்பரை 285 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.9700 -க்கும், அதிகபட்சம் ரூ. 10,808 -க்கும் விற்பனையானது. தொடர்ந்து, 2-ம் தர கொப்பரை 221 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ. 8400 -க்கும், குறைந்தபட்சம் ரூ. 6000 -க்கும் விற்பனையானது.

இன்று நடந்த ஏலத்தில், 11 வியாபாரிகள், 114 விவசாயிகள் பங்கேற்றனர். ஆனைமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கொப்பரையின் ஈரப்பதம் குறைந்துள்ளது.

இதனால், கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.469 கூடுதல் விலை கிடைத்துள்ளது. மொத்தம், 253 குவிண்டால் ரூ. 22 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது, என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...