கோவை: கோவை சாய்பாகாலணி, ரகுபதி லே அவுட் பகுதியில் ஓரிரு குரங்குகள் ஆங்காங்கே இருந்து வந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாலும், அதன் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால் அதனை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
கோவை: கோவை சாய்பாகாலணி, ரகுபதி லே அவுட் பகுதியில் ஓரிரு குரங்குகள் ஆங்காங்கே இருந்து வந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாலும், அதன் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால் அதனை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து, குரங்குகளை பிடிக்க வனத்துறை சார்பில் ஒரு வீட்டில் கூண்டு வைக்கபட்டது. கூண்டின் உள்ளே பழங்களை வைத்து உள்ள வனத்துறையினர், குரங்குகள் அதை தின்ன வரும்போது கதவு தானாக மூடும் வகையில் வைத்து உள்ளனர்.

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன், இந்த குரங்குகள் கூட்டமாக, அந்த பகுதியில் உள்ள வீட்டுக்கு வந்ததை கண்ட நாய் குரைத்து உள்ளது. நாயை குரங்குகள் ஒன்றாக பயமுறுத்தி உள்ளது. இதனையடுத்து, வீட்டின் உரிமையாளர் நாயை வீட்டின் உள்ளேயே அடைத்து வைத்துள்ளார்.
மேலும், அவர் அளித்த புகாரின் அடிப்படையில், வனத்துறையின் அதிவிரைவு குழுவினர், அந்த குரங்குகளை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளனர்.

இது குறித்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில்:
ஓரிரு குரங்குகள் மட்டுமே, இந்த பகுதியில் இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக 15ற்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன.
துணிமணிகளை எடுத்து செல்வது, கதவை தட்டுவது, மரங்களில் உள்ள பழங்களை பறித்து செல்வது என தொடர் அட்டகாசம் செய்து வருவதாக தெரிவித்தனர்.
இங்கு ஏராளமான குடியிருப்பு பகுதிகளும், அதிக அளவில் மாம்பழ மற்றும் பலா மரங்கள் உள்ள காரணமாகவே, இதனை தேடி, குரங்குகள் இங்கு வருவதாகவும், ஒரு சிலர் தெரிவித்தனர்.