கோவையில் ஆங்கில வழி கல்வி பயின்ற மகனை, அரசு பள்ளியில் சேர்த்த தமிழ் ஆசிரியை

கோவை: கோவையில் ஆங்கில வழி கல்வி பயின்ற தனது மகனை, அரசு பள்ளியில் சேர்த்த தமிழ் ஆசிரியை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் தரம் உயர்ந்து உள்ளது, என தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் ஆங்கில வழி கல்வி பயின்ற தனது மகனை, அரசு பள்ளியில் சேர்த்த தமிழ் ஆசிரியை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் தரம் உயர்ந்து உள்ளது, என தெரிவித்துள்ளார். 

கோவை செம்மாண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜாஸ்மின் விக்டோரியா. இவரது கணவர் பாலமுருகன் தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். 

இத்தம்பதியினருக்கு, ஜெரிக் சாமுவேல் (11) ஏஞ்சிலினா (1 1/2) வயது என இரு குழந்தைகள் உள்ளனர். ஜெரிக் சாமுவேல் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த நிலையில், இந்த வருடம் தனது மகனை ஆத்துபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்து உள்ளனர், அவர்களது

பெற்றோர். 

தனியார் பள்ளியில், தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் மோகம் பெற்றோர்களிடம் இருக்கும் அதிர்காரித்து வரும் நிலையில், ஆங்கில வழி கல்வி பயின்று வந்த மாணவனை அரசு பள்ளியில், இந்த ஆசிரியை சேர்த்து உள்ளார் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இது குறித்து, அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆரம்பம் முதலே குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம், தனக்கு இருந்ததாகவும் தனது எண்ணதிற்கு குடும்ப நபர்களுக்கு விருப்பம் தெரிவிக்காததால், மகனை தனியார் பள்ளியில் சேர்த்ததாக தெரிவித்தார். 

5 ஆம் வகுப்பு வரை தங்களது மகன் ஆங்கில வழி கல்வி முறையில் பயின்று வந்த நிலையில், இந்த வருடம் 6 வகுப்பு செல்ல இருந்த நிலையில் தனது விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தபோது, அவர் சம்மதம் அளித்ததை தொடர்ந்து அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தனது மகனுக்கும் இந்த சூழல் வெகுவாக பிடித்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தற்போது ஆங்கில வழி கல்வி நிலையங்களுக்கு இணையான தரத்தில் அரசு பள்ளிகளில் தரம் உயர்ந்து உள்ளது எனவும் தெரிவித்தார்.

கொரோனா கால கட்டத்தில் பணம் கட்ட முடியாமல் பலர் அவதிபட்டு வருவது, வேதனை அளிப்பதாகவும், பெற்றோர்கள் தங்கள் சூழ்நிலைகளை அறிந்து அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க முன்வர வேண்டும், என வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...