கோவை: கோவை காந்திபுரம், கிராஸ் கட் ரோட்டில் உள்ள லட்சுமி காம்ப்ளெக்ஸ் என்ற வணிக வளாகத்தில் கீழ் தளத்தில் செயல்பட்டு வரும் அன்னபூர்ணா உணவகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு மற்றும் அதே வணிக வளாகத்தில் உள்ள இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, அந்த வணிக வளாகம் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
"காந்திபுரம் லட்சுமி காம்ப்ளெக்ஸ் என்ற வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் அன்னபூர்ணா ஹோட்டல் ஊழியர் ஒருவருக்கு, அதே காம்ப்ளக்ஸ்யில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் ஒருவர், அந்த வணிக வளாகத்தில் உள்ள கடை ஊழியர் ஒருவர் என 3 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியபட்டு உள்ளது", என மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர் கனகராஜ் தெரிவித்து உள்ளார்.
மேலும், அன்னபூர்ணா உணவகத்தில் பணிபுரியும் 45 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் உள்ள செல்வ சிங் பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் 15 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளை மூட மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டு, அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் சுகாதாரத்துறை சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.