கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் இயங்கி வரும் செல்வசிங் ஸ்டோர்ஸ் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது.
கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் இயங்கி வரும் செல்வசிங் ஸ்டோர்ஸ் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது.
இதனையடுத்து, அங்கு பணிபுரியும் கடை ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை, தொடர்ந்து அந்த கடை மூடப்பட்டது.
மேலும், சமீபத்தில் அந்த கடைக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களை, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, செல்வசிங் பல்பொருள் அங்காடி அருகில் இயங்கி வந்த ராம்ராஜ் காட்டன் துணிக்கடையை தற்காலிகமாக மூட அந்த, நிர்வாகம் முடிவு செய்துள்ளது.