திருப்பூர் அருகே பனியன் துணிகள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து; மின்கம்பங்கள் சேதம்

திருப்பூர்: திருச்சியிலிருந்து திருப்பூரைச் சேர்ந்த தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு பனியன் துணிகளை ஏற்றி வந்த லாரி, காங்கேயம் சாலை வழியாக வந்து கொண்டிருந்த போது, நேற்று மாலை நல்லூர் அருகே லாரி நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

திருப்பூர்: திருச்சியிலிருந்து திருப்பூரைச் சேர்ந்த தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு பனியன் துணிகளை ஏற்றி வந்த லாரி, காங்கேயம் சாலை வழியாக வந்து கொண்டிருந்த போது, நேற்று மாலை நல்லூர் அருகே லாரி நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதி

விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த இடத்தில் இருந்த சில கடைகளின் முன் பக்கம் சேதமடைந்ததுடன், அங்கு சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன.



மேலும், லாரி மின்கம்பத்தில் மோதியதில், மின்கம்பம் வளைந்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.



உடனடியாக தகவல் அறிந்த, காவல்துறையினர் கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர். மேலும், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...