கோவையில் ஊராட்சி மன்றத்‌ தலைவரை ஜாதிப்‌ பெயரைச்‌ சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்த நபர்‌ மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு!

கோவை: கோவை சுல்தான் பேட்டை அருகே ஊராட்சி மன்றத்‌ தலைவரை ஜாதிப்‌ பெயரைச்‌ சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்த நபர்‌ மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.









கோவை: கோவை சுல்தான் பேட்டை அருகே ஊராட்சி மன்றத்‌ தலைவரை ஜாதிப்‌ பெயரைச்‌ சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்த நபர்‌ மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. 

கோவை சுல்தான் பேட்டை, ஊராட்சி ஒன்றியம்‌ ஜே.கிருஷ்ணாபுரம்‌ ஊராட்சி மன்றத்‌ தலைவராக உள்ள சரிதாவை, அதே பகுதியில் வசித்து வரும்‌ உசிலைமணி (௭) பாலசுப்பிரமணியம்‌ என்பவர்‌, ஊராட்சி மன்ற அலுவலகத்தில்‌ வந்து பொதுமக்களுக்கு பணி செய்ய விடாமல்,‌ தாழ்த்தப்பட்டவர் என்று தகாத வார்த்தைகளால் திட்டி வருவதாக, சரிதா மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், ஊராட்சி எல்லை தகவல்‌ பலகையில்‌ மற்றும்‌ அலுவலக கட்டிடத்தில்‌ அவரது பெயர்‌ எழுத விடாமல்‌ தடுத்து வருவதாகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச்‌ சேர்ந்தவர் என்று திட்டியும், அலுவலகத்தில்‌ உட்காரவிடாமல்‌ மிரட்டி வந்ததாக, தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) ஊராட்சி மன்ற அலுவலகத்தில்‌ வேலை செய்து கொண்டிருந்த போது அலுவலகத்தில் நுழைந்த‌ பாலசுப்பிரமணியம், "ஏன்டி, நீ தாழ்த்தப்பட்ட ஜாதியைச்‌ சேர்ந்தவள்‌. எனக்கு மரியாதை கொடுக்காமல்‌, தலைவர்‌ சீட்டில்‌ உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய்"‌, என்று கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்‌, என ஊராட்சி தலைவர், சரிதா தெரிவித்துள்ளார். 

மேலும்‌, இனிமேற்கொண்டு ஊராட்சி மன்றத்‌ தலைவர் சீட்டில்‌ உட்கார்ந்தால்‌, உன்னைக்‌ கொன்று விடுவேன்,‌ என்று கொலை மிரட்டலும் விடுத்துள்ளார், என்று சரிதா தெரிவித்தார். 

இந்த நிலையில், தனக்கு கொலை மிரட்டல்‌ விடுத்ததால் வேலைக்கு வர, பயமாக உள்ளதாகவும், ஜாதிப்‌ பெயரைச்‌ சொல்லி திட்டி, கொலை செய்து விடுவேன்‌ என மிரட்டிய நபர்‌ மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு ஜே.கிருஷ்ணாபுரம்‌ ஊராட்சி மன்றத்‌ தலைவர், சரிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று மனு அளித்தார்.



Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...