கோவை: கோவை காரமடை அரங்கநாதர் கோவிலில் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க தேர் அமைப்பதற்கான துவக்க விழா எளிமையான முறையில் நடைபெற்றது.
கோவை: கோவை காரமடை அரங்கநாதர் கோவிலில் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க தேர் அமைப்பதற்கான துவக்க விழா எளிமையான முறையில் நடைபெற்றது.
கொங்கு மண்டலத்தின் பிரசித்திபெற்ற வைணவ திருத்தலமானது 1500 ஆண்டுகள் பழமையான ஆலயமாகும். இந்த திருக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமகா திருத்தேரோட்டம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவிலுக்கு உபயதாரர்கள் மூலம் தங்கத்தேர் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
பரிவேட்டை மைதானத்தில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் கோவில் ஸ்தலத்தில், உபயதாரர்கள், குடும்பத்தார் முன்னிலையில் வேதவிற்பனர்கள் மூலம் சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டு அரங்கநாத பெருமாளுக்கு தங்கதேர் அமைக்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதனையடுத்து, திருத்தேர் அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட மரங்களுக்கு பூஜைகள் செய்து பணிகள் துவங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னராஜ், அருண்குமார், முன்னாள் எம்.பி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தனர்
பல கோடி ரூபாய் மதிப்பில் அரங்கநாதர் கோவிலில் முதன் முதலாக செய்யப்பட உள்ள தங்க தேரானது முழுக்க முழுக்க உபயதாரர்கள் நன்கொடையை மட்டுமே கொண்டு அமைக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தங்கதேரினை அளிக்க உள்ள எம்.எம்.ராமசாமி உபயதாரர் குடும்பத்தார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்டு எளிமையான முறையில் நடைபெற்றது.