கோவை: பொள்ளாச்சியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அனைத்துக் கட்சியினர், சார் ஆட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரியிடம், இன்று மனு கொடுத்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 18 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் வசித்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் மண் சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால், பழங்குடியின மக்கள் வாழும் இடங்களான, பொள்ளாச்சி அருகே உள்ள நாகர் ஊற்று, மற்றும் கல்லார் குடி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்த வீடுகள் சேதமடைந்தது.
அதையொட்டி, அம்மக்கள் அனைவரும் அன்றிலிருந்து இன்று வரை, அரசு தற்காலிமகமாக ஏற்படுத்தி கொடுத்த குடியிருப்புகளில் தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில், நிலச்சரிவு ஏற்பட்டு ஓராண்டாகியும் இன்னும் அவர்களுக்கு பாதுகாப்பான வீடு, கழிப்பிடம், சாலை வசதிகள் செய்து தர படவில்லை.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும், பழங்குடியின மக்களுக்கு உடனடியாக பாதுகாப்பான இருப்பிடம், உள்ளிட்ட வசதிகளை செய்து தரவேண்டும் என்று, திமுக, கம்யூனிஸ்ட், மதிமுக, மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.