கொரோனா பாதித்த பெண்ணிற்கு சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த கோவை ESI மருத்துவ குழு..!

கோவை: கோவை வேடப்பட்டியை சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் குடல் இறக்க நோயால், சில வருடங்களாக அவதிப் பட்டுக்கொண்டிருந்தார். 

அது மட்டுமல்லாமல், அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் தைராய்டு போன்ற பிரச்சினைகளும் இருந்தன. இந்த நிலையில், குடல் இரக்கத்திற்குசிகிச்சை பெறவேண்டி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு, அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன் செய்யவேண்டிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. தற்போதைய, சூழ்நிலையில் அறுவை சிகிச்சைக்கு முன் கொரோனா தொற்றுபரிசோதனை செய்ய வேண்டும் என்பதால், அவருக்கு கொரோனாபரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளிக்கு கொரோனா சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்ய நிறைய செலவு ஆகும் என்பதால், அவரை அங்கிருந்து வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு கொரோனா பாதித்தநோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதில்லை என்று கூறியநிலையில், அவர் கடந்த 16 ஆம் தேதி அன்று ESI மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் தைரொய்ட் பிரச்சினைகள் இருந்ததாலும், கொரோனா பாதித்தவருக்கு அறுவை சிகிச்சை செய்தால் சிகிச்சைக்கு பின் நிறைய பாதிப்புகள் வர வாய்ப்பு இருந்ததால், முடிந்தவரை கொரோனா பாதிப்பு சரியாகும்வரை, அறுவை சிகிச்சையை ஒத்திவைக்க, மருத்துவக்குழுவினர் ஆலோசித்து முடிவு செய்து, கொரோனா தொற்றுக்கு முதலில் சிகிச்சையை துவங்கினர். 

ஆனால், இரண்டு நாட்கள் சென்ற நிலையில், குடல் இரக்கம் இருந்த இடத்தில் சிறுகுடல் சிக்கிக்கொண்டு அதில் அடைப்பு ஏற்பட்டதால், மலம் வெளியாவதில் சிக்கல் உண்டானது.மேலும், குடல் இரக்கத்திற்கு அறுவை சிகிச்சை உடனடியாக செய்யாவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில், ESI மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர். நிர்மலா, மருத்துவ கண்காளிப்பாளர் மருத்துவர்ரவிக்குமார் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி அன்று இரவு 10 மணி முதல் 12 மணி வரை சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர். தமிழ்ச்செல்வன், மயக்க மருந்துதுறை தலைவர், டாக்டர்.கனகராஜ் மற்றும் இரு துறைகளின் மூத்த மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவர்கள் நந்தகோபால்பழனிசாமி, செல்வராஜ் மற்றும் கௌதம், அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

தற்போது, அந்த பெண் நல்ல முறையில் உடல் நலம் தேறி வருவதாக இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...