கோவை: பொள்ளாச்சி நகர் மற்றும் கிராம பகுதிகளில், கடந்த சில மாதங்களாக தொடர் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது.

தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களை கண்டுபிடிக்க கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவிட்டார். இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி அருகே சந்தேகத்திற்கு இடமான 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஆனைமலை பகுதியைச் சேர்ந்த முகமது யாசின் மற்றும் மாக்கினாம்பட்டி நேரு நகரை சேர்ந்த பாண்டியன் ஆகிய இருவரும், பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி, பாலக்காடு ரோடு அன்பு நகர், கோட்டூர் கரியான்செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டை உடைத்து நகை பணம் திருடியது, வஞ்சியாபுரம் அரசு டாஸ்மாக் கடையில் சுவரை துளையிட்டு மதுபாட்டில்கள் திருடியது, உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரும் கொள்ளையடித்த 55.50 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1,28,000 பணம் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார், பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-யில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.