கோவை மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 23 குழந்தை திருமணங்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் ஊரடங்கு காலத்தில் மட்டும் 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 23 குழந்தை திருமணங்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் ஊரடங்கு காலத்தில் மட்டும் 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டபூர்வ வயதாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்த வயது முழுமை அடையாமல்,

அதற்கு முன்னதாக நடக்கும் எந்த திருமணமும் சட்டத்தை மீறிய செயலாக கருதப்படுகிறது. இந்து நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 23 குழந்தை திருமணங்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்:

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 58 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 23 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் மார்ச் முதல் ஜூலை மாதம் வரை மட்டும், 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 

குழந்தை திருமணம் பற்றி தகவல் கொடுப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். 

குழந்தை திருமணம் நடத்துபவர் மற்றும் ஊக்குவிப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய கடுங்காவல் தண்டனை அல்லது அத்துடன் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். 

மேலும், குழந்தை திருமணத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், புகார்கள் எவ்வகையில் கிடைக்கப் பெற்றாலும், புகாரினை ஏற்று உடனடி நடவடிக்கை எடுக்க, குழந்தைத் திருமண தடுப்பு அலுவலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான புகார்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலர் அல்லது தொலைப்பேசி எண் 1098க்கும் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...