கோவை: சிஆர்பிஎப் காவலர் விடுமுறை எடுத்து ஊருக்கு வர முடியாது என அவர் மனைவியிடம் கூறியதால், வீடியோ காலில் தற்கொலை செய்து கொள்வதாக கூறி, மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் முத்துக்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் சங்கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ராஜேஷ்குமார், சிஆர்பிஎப் பிரிவில் காவலராக நாகலாந்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், உடனடியாக விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வருமாறு சங்கீதா தெரிவித்துள்ளார், ஆனால் உடனடியாக விடுமுறை கிடைக்காது எனவும் பின்னர் வருவதாக ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார் என்று
கூறப்படுகின்றது.
இதனால் கோபமடைந்த சங்கீதா, வீடியோ காலில் தற்கொலை செய்து கொள்வதாக ராஜேஷ்குமாரிடம் கூறிய பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.