கோவையில் மீண்டும் பரபரப்பு..! பெரிய கடை வீதியில் சாலை ஓரத்தில் இருந்த 3 அடி விநாயகர் சிலை சேதம் - போலீசார் விசாரணை

கோவை: கோவை பெரிய கடை வீதியில் சாலை ஓரத்தில் இருந்த 3 அடி விநாயகர் சிலை சேதமடைந்திருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை பெரிய கடை வீதியில் சாலை ஓரத்தில் இருந்த 3 அடி விநாயகர் சிலை சேதமடைந்திருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை பெரிய கடை வீதியில் 3 அடி உயரம் கொண்ட சாலையோர விநாயகர் சிலை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை விநாயகர் சிலை சேதம் அடைந்து இருந்ததைக் கண்ட அப்பகுதியினர் இதுகுறித்து பெரியகடைவீதி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.



இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மர்ம நபர்களால் விநாயகர் சிலை திட்டமிட்டு உடைக்கப்பட்டதா? அல்லது ஏதேனும் சாலையில் செல்லும் வாகனம் மோதி உடைந்ததா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சிலை இருந்த இடத்தின் அருகே இருக்கும் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்‌. இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்தில் திரண்ட இந்து அமைப்பினர் சேதமடைந்த விநாயகர் சிலையை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய சிலையை நிறுவும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இது குறித்து இந்து அமைப்பினர் கூறுகையில், சமூக விரோதிகள் சிலர் திட்டமிட்டு கடப்பாறையை கொண்டு சிலையை சேதப்படுத்தி இருக்கக்கூடும் என்று குற்றம்சாட்டினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...