மேட்டுப்பளையயம் தனியார் விடுதியில், முகம் பார்க்கும் கண்ணாடியின் உள்பகுதியில் ரகசிய அறையில் விபச்சாரம்; கோவை எஸ்பி உத்தரவின்பேரில் காவல்துறை கைது நடவடிக்கை!

கோவை: மேட்டுப்பளையத்தில் தனியார் விடுதியில் ரகசிய அறைகளை ஏற்படுத்தி அதில் வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த இருவர் கைது-- போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவை: மேட்டுப்பளையத்தில் தனியார் விடுதியில் ரகசிய அறைகளை ஏற்படுத்தி அதில் வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த இருவர் கைது-- போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தனியார் விடுதிகளில் வெளிமாநில பெண்களை ரசசிய அறையில் அடைத்து வைத்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக, கோவை மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

ரகசிய தகவலின் பேரில், கோவை மாவட்ட எஸ்பி அருளரசு அவர்கள் உத்தரவின்பேரில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர், கேசவன் தலைமையிலான தனிப்படை போலீசார் கல்லார் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

கல்லார், ரயில்வே கேட் அருகே இருக்கக்கூடிய தனியார் விடுதியில் சுமார் ஒரு மணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு வெளிமாநில பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதை மேட்டுப்பாளையம் போலீசார் கண்டுபிடித்தனர்.

அங்குள்ள, ஒரு படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் உள்பகுதியில் ரகசிய வழியை ஏற்படுத்தி, ரகசிய அறைகள் அமைத்து விபச்சாரம்

நடத்தியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், இந்த விடுதியை நடத்தி வந்த வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த மகேந்திரன் மற்றும் கணேஷ் என்ற இருவரை கைது செய்தனர்

மேலும், இந்த விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணை மீட்ட போலீசார், அந்தப் பெண்ணை கோவையில் உள்ள அரசு மகளிர் காப்பகத்திற்கு, அனுப்பிவைத்தனர்.

தற்போது, சுற்றுலாவிற்க்கு யாரும் வராத சூழ்நிலையில், அனைத்து தங்கும் விடுதிகளும் அடைக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில், ஒரு சில தங்கும் விடுதிகள் இது மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது மாதிரி செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும், என கோவை மாவட்ட கண்காணிப்பாளர், அருளரசு எச்சரித்துள்ளார். 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...