முழு ஊரடங்கால் ஞாயிற்றுக்கிழமைகளில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு, பொள்ளாச்சி மின்னல் அரிமா சங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டது

கோவை: தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால், பொள்ளாச்சி நகர்ப்பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள், உணவு இன்றி தவித்து வந்தனர்.

கோவை: தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால், பொள்ளாச்சி நகர்ப்பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள், உணவு இன்றி தவித்து வந்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு, முழு ஊரடங்கான இன்று மின்னல் அரிமா சங்கம் சார்பில், உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி மின்னல் அரிமா சங்கத்தின் தலைவர் சீனிவாசன், கோவை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்.

இந்த ஊரடங்கு முடியும் வரை, பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு ஊரடங்கு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தொடர்ந்து வழங்கப்படும், என்று மின்னல் அரிமா சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...