பொள்ளாச்சி ஆழியார் அணை 101 அடியை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி ஆழியார் அணை 101 அடியை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக போதிய மழையின்றி, ஆழியார் அணையில் நீர்மட்டம் 60 அடிக்கும் கீழ் இருந்து வந்தது. இந்நிலையில், ஆழியார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான காடம்பாறை, அப்பர் ஆழியார், கவர்க்கல், சக்தி எஸ்டேட்உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணை தற்போது 101 அடியை எட்டி உள்ளது. இன்றைய நிலவரப்படி, அணைக்கு, வினாடிக்கு 1794 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.

மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒரு சில தினங்களில் ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...