நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 965 பேராக உயர்ந்துள்ளது.
இதுவரை, 135 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் 827 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் இதுவரை மூன்று பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக, மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் விவரம்:
தங்கமலை சாலை, கோத்தகிரி பகுதியை சேர்ந்த 16 வயதுடைய ஆண்.
கெரடா, கோத்தகிரி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண்.
வி.பி தெரு, குன்னூரை சேர்ந்த 28 வயதுடைய ஆண்.
நெடுகுளா, கோத்தகிரியை சேர்ந்த 33 வயதுடைய ஆண் மற்றும் வயது 31 வயது பெண்.
சோலூரை சேர்ந்த 24 வயதுடைய ஆண்.
எஸ்.வி.நகர், கூடலூரை சேர்ந்த 58 வயதுடைய ஆண்.