கோவையில் வீடியோ கேம் விளையாடுவதை பெற்றோர்கள் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

கோவை: கோவையில் வீடியோ கேம் விளையாடுவதை பெற்றோர்கள் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம்.அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் வீடியோ கேம் விளையாடுவதை பெற்றோர்கள் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம்.அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் செல்வபுரம் பாரதி நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராஜா (37) காமாட்சி (34) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், ஆறு வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

7ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சிறுவனுக்கும் தாய், காமட்சிக்கும் செல்போனில் நீண்ட நேரம் பயன்படுத்தி வீடியோ கேம் விளையாடுவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

செல்போனில் விளையாடுவதை தாய் கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளான். நீண்ட நேரம் ஆகியும் மகன் அறையை விட்டு வெளியே வராததால் பெற்றோர் சென்று பார்த்தபோது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியை அடைந்து கதறி அழுதனர்.

இது குறித்து செல்வபுரம் காவல் நிலையதிற்கு தகவல் அளிக்கபட்டது. அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். பின்னர், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டது. 

தாய் கண்டித்ததால் தூக்குபோட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...