சுற்றுச்சூழல் அவசர சட்டம் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு எதிரானது - முத்தரசன் குற்றச்சாட்டு!

கோவை: சுற்றுச்சூழல் அவசர சட்டம் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு எதிரானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: சுற்றுச்சூழல் அவசர சட்டம் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு எதிரானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை சிரியன் சர்ச் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இந்தளவு பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது என்றார்.

ஊரடங்கு நீடிக்கப்பட்டால் பாதிக்கப்படும் மக்களை பற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு கவலையில்லை எனவும் மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட மக்களுக்கு தரவில்லை என்று கூறினார். மேலும் ஊரடங்கினால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஒவ்வொரு குடும்பத்திற்கு மாநில அரசு 5 ஆயிரம் ரூபாயும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு 7 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

அதேபோல, கொரோனா நெருக்கடி சூழலைப் பயன்படுத்தி மக்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது எனவும் மனு தர்ம கொள்கையை அமல்படுத்த பாஜக முயற்சி செய்கிறது என முத்தரசன் குற்றம்சாட்டிய அவர், மின்சார வரைவு மசோதாவினை ஏற்க மாட்டோம் என தமிழக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் அவசர சட்டம் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு எதிரானது என தெரிவித்தார்

மேலும், மத்திய அரசின் தவறான திட்டங்கள் தொடர்பாக ஜனநாயக ரீதியாக கருத்துகள் கூட சொல்ல முடியவில்லை எனவும் கருத்து சொல்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் பாலன் இல்லம் மற்றும் மூத்த தலைவர் நல்லகண்ணுவை இழிவாக விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆயிரக்கணக்கில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

பெரியார் சிலை அவமதிப்பு மற்றும் கட்சி அலுவலகம் மற்றும் தலைவர்கள் மீதான இழிவான விமர்சனம் தொடர்பாக அதிமுக கட்சி மற்றும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சார்பில் இதுவரை கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் கூறிய அவர், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுகிறது எனவும் இந்தியாவில் சர்வாதிகார பாசிச ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு அதிமுக அரசு துணை போகிறது எனவும் முத்தரசன் குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...