கோவை போத்தனூர் அருகே இளம் பெண் தீயில் கருகி உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

கோவை: கோவை போத்தனூர் அருகே இளம் பெண் தீயில் கருகி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவை போத்தனூர் அருகே இளம் பெண் தீயில் கருகி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா (27). இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்த சுலோச்சனா மீண்டும் திருநெல்வேலி திரும்பியவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

அப்போது, கட்டிட வேலை செய்ய வந்த சதீஷ்(32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து உள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் கோவையில் போத்தனூர் அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அதே பகுதியில் ரங்கசாமி கவுண்டர் வீதியில் இன்று குடியேறி உள்ளனர். சுலோச்சனாவின் இரண்டாவது கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இன்று புதிய வீட்டிற்கு குடிபுகுந்த நிலையில் சுலோச்சனா தீ விபத்தில் உடல் கருகி பலியானார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார், தீ விபத்து ஏற்பட்டு மரணமடைந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுலோச்சனாவின் உடலை மீட்ட போலீசார் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை குடி பெயர்ந்த இளம் பெண் தீயில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...