திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காளிநாதம் பாளையத்தில் இலவச மின்சார உரிமை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் சார்பில் மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா - 2020 யை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் கறுப்புக்கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள மின்சார சட்ட திருத்த மசோதா - 2020 அமலாகும் பட்சத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரமும், கைத்தறிகளுக்கு 250 யூனிட் மின்சாரமும், விசைத்தறிகளுக்கு 750 மின்சாரமும் ரத்தாகும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது, என இலவச மின்சார உரிமை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தினர் குற்றம் சாட்டினர்.
அதோடு, மின்சாரம் சமூகநீதி பண்டம் என்ற பட்டியலில் இருந்து சந்தை பண்டமாக மாற்றப்பட உள்ளதால் தற்போது உள்ளதைவிட மின்சாரம் மூன்று மடங்கு விலை ஏற்றத்தை பெரும், என தெரிவித்த அவர்கள், இதனால் குறு விவசாயிகளும், நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கும் மின்சாரம் இனி எட்டாக்கனியாகி விடும், என்றனர்.
தற்போது, பெட்ரோலியம் பொறுத்தவரை அந்த நிறுவனங்கள் தான் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதே போன்று எதிர்காலத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களாலும், வெளியிடும் நிறுவனங்களாலும் தினசரி சந்தை விலை நிர்ணயம் செய்யப்படும் நிலை உருவாகும்.
எனவே, இந்த சட்டம் கடுமையாக அனைத்து மக்களையும் பாதிக்கக் கூடியது எனவும் இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காளிநாதம்பாளையம், அக்கணம் பாளையம், அய்யம்பாளையம், அல்லாலபுரம், குப்பிச்சிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.