சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 12.69 அடியாக உயர்வு!

கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் தென்மேற்கு பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் 12.69 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் தென்மேற்கு பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் 12.69 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும் நூற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கும் சிறுவாணி அணை நீர் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரைத் தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயரமுள்ளது. 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டது.

கடந்த ஜூன் மாதம் அணையின் அளவு, மழை பொழிவு குறைவான காரணத்தினால் குறைந்தது. அணையின் நீர்மட்டம் அளவு 3 அடிக்கும் குறைவாக காணப்பட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடு அபாயம் நிலவி வந்தது.

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை துவங்கியதில் இருந்து கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 12.69 அடியாக உயர்ந்துள்ளது.

இதில், நேற்று அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 20மிமீ மழை பெய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்ட அளவு தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகராட்சி சார்பாக தினமும் சிறுவாணியில் இருந்து 60 எம்.எல்.டி நீர் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது. தற்போது உள்ள நிலவரப்படி டிசம்பர் மாதம் வரை குடிநீர் பிரச்சனை இருக்காது, என்று தெரிவித்தார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...